இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினார். 

Advertisement

இருப்பினும் அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரிவிக்கப்படவில்லை. அதன்பின் விராட் கோலியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகினார். ஆனால் விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி அதனை முற்றிலுமாக மாறுத்ததுடன், “எங்கள் அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது போன்ற செய்திகளை சரியான தகவல் இல்லாமல் பரப்ப வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்”என்று விளக்கமளித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "விராட் கோலி நன்றாக இருக்கிறார். விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர். இதனால் தான் தனது குடுமபத்துடன் விராட் கோலி நேரத்தை செலவிட்டு வருகிறார். பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம் என்று நான் நினைக்கிறேன். அதனால், விராட் கோலியை தவறாக மதிப்பிட கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை மணந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழைந்தை (வாமிகா) பிறந்தது. மேலும் தனது முதல் குழந்தை பிறப்பின் போதும் அவர் டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News