ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சி நேற்றைய தினம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மற்றொரு ஜெர்சி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏதாவது ஒரு போட்டியில் சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பச்சை நிற ஜெர்சி அனிந்து விளையாடிவருகிறது. அந்தவகையில் அந்த அணியின் ‘கோ க்ரீன்’ ஜெர்சியை கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி ஆகியோர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் இந்த புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஆர்சிபி அணி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லோக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News