பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!

Updated: Thu, Oct 03 2024 22:22 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து பேசிய விராட் கோலி, “இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆரம்ப காலங்களில் மிகவும் கடுமையாக இருந்தது.

அதனால் இத்தொடரின் சூழலானது மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் நாங்கள் இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றதால், இப்போது இரு அணிகலுக்கும் இடையேயான போட்டி மரியாதையாக மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அந்த மரியாதை எங்களுக்கு கிடைத்தது. ஏனெனில் நாங்கள் அவர்களை அவர்களின் சொந்த மண்ணில் இரண்டு முறை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம், இத்தொடர் குறித்து பேசிய அஸ்வின், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்த அணிக்கு திறமை கிடைத்துள்ளது என்பதை நிச்சயமாக அறிவார்கள், தற்போது அவர்கள் எதிரணியில் உள்ளவர்களை மதிக்கிறார்கள், நான் விளையாடும் டிரஸ்ஸிங் ரூமுக்குள் இருக்கும் அனைவரும் அப்படித்தான். ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பானது என்பதை நங்களும் அறிவோம். ஏனெனில் அவர்கள் அணியிலும் சில அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அதனால் எங்கள் இரு அணிக்கு பரஸ்பர மரியாதை மற்றும் தோழமையுடன் இருப்பது மிகவும் சிறந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை