விராட், ரோஹித் கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் - ஜோஷ் ஹசில்வுட்!

Updated: Sat, Sep 30 2023 14:02 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக தகுதியடைந்த அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் சொந்த மண்ணில் மீண்டும் உலகக்கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில் பொதுவாக இந்தியாவின் கவாஸ்கர், சச்சின் மற்றும் விராட் கோலி மூவருமே அவர்களுடைய காலத்தில் இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன் களில் முன்னணி இடத்தை பெற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு பின்னால் வரக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மெக்ராத் என்று கூறப்படும் ஜோஷ் ஹசில்வுட் கடந்த எட்டு பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்கின்ற தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “கடந்த எட்டு முதல் பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகத்தில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவர்தான் இருந்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரகளை எட்டிய இரண்டாவது வீரர் என்கின்ற சாதனையைப் படுத்திருந்தார். முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::