விராட் கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்வி - கௌதம் கம்பீர் நச் பதில்!
இந்திய அணி இன்னும் சில நாள்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மேற்கொண்டு அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டிருந்த ரோஹித் சர்மா, விரட் கோலி ஆகியோரும் தங்கள் முடிவை கைவிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தொடர் முதல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீர்ர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பட்டத்து. அதற்கு பதிலளித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். அது டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் திறனை நிரூபிக்க தவறியதில்லை.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பை தொடரிலும் விளையாடும் திறன் இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம். ஆனால் அவர்கள் அதுவரை முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.