இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கபப்ட்டுள்ளனர். மேற்கொண்டு ரோஹித், விராட் கோலியின் இடங்களை நிரப்பும் வகையில் சாய் சுதர்ஷன், கருண் நாயர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விராட் கோலி விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் தற்சமயம் இந்திய அணி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய தோல்வியடையும் என்ற பயம் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக சில இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் வழக்கம்போல் தங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசரும், வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதாக கூறி ரசிகர்களை சீண்டிவுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று நான் நினைத்தேன், இங்கிலாந்து அணியும் அதனை எதிர்பார்த்தது. ஆனால் அவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அவர் ஆஃப் ஸ்டம்புகளுக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிறமப்பட்டு வருவது உங்களுக்கு தெரியும். அதனால் பிசிசிஐ மற்றும் தேர்வுகுழு தலைவர் விராட் கோலியிடம் பேசியிருக்கலாம். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேலும் அவர்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் நன்றாக ஸ்கோர் செய்யவில்லை என்றால், ஐந்து போட்டிகளிலும் விளையாடவது குறித்து எதிர்பார்க்காதீர்கள் என்று விராட் கோலியிடம் கூறி இருக்கலாம். அதனால் இதுகுறித்து யோசித்த பிறகு விராட் கோலி தனது ஓய்வு முடிவை அறிவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு வங்கியுள்ளார் என்று நான் நம்புகிறேன். தற்போது கருண் நாயர் அவரது இடத்தில் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறிவுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News