ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!

Updated: Sun, Apr 20 2025 20:19 IST
Image Source: Google

முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடிக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலாஞ்சர்ஸ் பெங்காளூரு அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் விராட் கோலி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கொண்டு இந்த இன்னிங்ஸிற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல்லில் அதிக முறை 50+ ரன்கள் 

இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 184 இன்னிங்ஸ்களில் விளையாடி 66 முறை 50+ ஸ்கோரை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், விராட் கோலி 252 இன்னிங்ஸ்களில் தனது 67ஆவது 50+ ஸ்கோரை பதிவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக 50+ ரன்கள் எடுத்தவர்கள்

  • 67-விராட் கோலி*
  • 66 - டேவிட் வார்னர்
  • 53 - ஷிகர் தவான்
  • 45 - ரோஹித் சர்மா
  • 43 - ஏபி டெவிலியர்ஸ்
  • 43 - கே.எல். ராகுல்
  • 40 - சுரேஷ் ரெய்னா

கிறிஸ் கெயிலை சமன் செய்தார்

இது தவிர, உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ஸ்கோரை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாமப்வான் கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். அதன்படி ஒட்டுமொத்தமான டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 110 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்திருந்த நிலையில், விராட் கோலியும் 110 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்ன 116 முறை 50+ ஸ்கோரை அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள்

  • 116: டேவிட் வார்னர்
  • 110: விராட் கோலி
  • 110: கிறிஸ் கெய்ல்
  • 101: பாபர் அசாம்
  • 95: ஜோஸ் பட்லர்

ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்

இப்போட்டியில் விராட் கோலி ஆட்டநயகன் விருதை வென்றதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் கூட்டாக முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி அவர் 19ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். 

அதிக ஆட்டநாயகன் விருதுகள்

  • 25 - ஏபி டெவிலியர்ஸ்
  • 22 - கிறிஸ் கெய்ல்
  • 19- விராட் கோலி*
  • 19 - ரோஹித் சர்மா
  • 18 - டேவிட் வார்னர்
  • 18 - எம்எஸ் தோனி

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 33 ரன்களையும், ஷஷாங்க் சிங் 31 ரன்களையும், மார்க்கோ ஜான்சென் 25 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 73 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை