ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!

Updated: Sun, Oct 22 2023 22:35 IST
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி! (Image Source: Google)

இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று இருந்தன.

இந்த நிலையில் இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருக்கிறது. இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் தந்தார்கள். அதற்குப் பிறகு கணிசமான ரன்களில் நான்கு விக்கெட்டுகள் விழ, சூரியகுமார் யாதவ் வந்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இருப்பினும் வழக்கம்போல் விராட் கோலி தனியாளாக நின்று போராடி 8 பவுண்டரி 2 சிக்சர்கள் என 95 ரன்களில் விக்கெட்டை இழந்து 5 ரன்களில் தனது 49ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை தவறவிட்டர். இருப்பினும் இந்திய அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் புதிய மைல்கல் ஒன்றை எட்டி இருக்கிறார். விராட் கோலி இன்று ஐசிசி வெள்ளை பந்து தொடர்களில் ஒட்டுமொத்தமாக மூன்றாயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்கின்ற அபூர்வ சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்திருக்கிறார்.

ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் :

  • விராட் கோலி 3000+ ரன்கள்
  • கிறிஸ் கெயில் 2942 ரன்கள்
  • குமார் சங்ககாரா 2876 ரன்கள்
  • மகேல ஜெயவர்த்தனே 2858 ரன்கள்
  • ரோஹித் சர்மா 2733 ரன்கள்
  • சச்சின் டெண்டுல்கர் 2719 ரன்கள்
  • ரிக்கி பாண்டிங் 2442 ரன்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை