ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு பவுண்டரியை அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். தற்போது வரையிலும் இந்த சாதனை முன்னாள் வீரர் ஷிகர் தவான் பெயரில் உள்ளது. 

ஷிகர் தவான் இதுவரை 222 போட்டிகளில் 221 இன்னிங்ஸ்களில் விளையாடி 768 பவுண்டரிகளைக் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி இதுநாள் வரையில் 266 போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் விளையாடி 768 பவுண்டரிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து வருகிறார். அதேசமயம் இந்த பட்டியலில் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் 663 பவுண்டரிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர்த்து இப்போட்டியில் விராட் கோலி 72 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். தற்போது பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 13571 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் 13537 ரன்களுடன் 4ஆம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 13500 ரன்களுடன் இந்த பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார்.  மேலும் அதிக டி20 ரன்களை அடித்த ஆசிய வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

  • கிறிஸ் கெயில் - 14562 ரன்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் - 13689 ரன்கள்
  • சோயப் மாலிக் - 13571 ரன்கள்
  • கீரன் பொல்லர்ட் - 13537 ரன்கள் 
  • விராட் கோலி - 13500 ரன்கள்
Advertisement

RCB vs PBKS Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், வைஷாக் விஜய் குமார்.

இம்பாக்ட் பிளேயர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Royal Challengers Bengaluru XI :பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் பிளேயர் - சுயாஷ் சர்மா.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News