டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் அடித்தது. இப்போட்டியிலும் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

Advertisement

இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என நினைத்திருந்தபோது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வந்தவர் வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ். பவர்-பிளே ஓவரில் இந்திய பவுலர்கள் வீசும் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக அடித்து திணறடித்தார்.

Advertisement

ஆறு ஓவர்களில் 60 ரன்களை எட்டியது வங்கதேச அணி. அப்போது லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். நடுவில் மழை குறுகிட்டதால், ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக இந்திய அணியின் பக்கம் மாறியது.

கேஎல் ராகுலின் தரமான சிந்தனையால் லிட்டன் தாஸ் ரன்-அவுட் ஆகினார். இவர் 27 பந்துகளில் 60 ரன்கள் விலாசி இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு சென்றார். இறுதியில் இந்திய அணி தனது பந்துவீச்சின் மூலம் வங்கதேசத்தை கட்டுப்படுத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லிட்டன் தாஸ் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது என்று இந்திய வீரர்களே பாராட்டினர். முன்னாள் கேப்டன் விராத் கோலி ஒரு படி மேலே சென்று இவருக்கு உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறார். அதாவது தனது பேட்டை நேராக வங்கதேச அணி வீரர்கள் இருந்த இடத்திற்கே சென்று லிட்டன் தாஸ்-இடம் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த வங்கதேச அணியின் செயல் அதிகாரி, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

அவர் கூறுகையில்,“நாங்கள் அனைவரும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தோம். அப்போது நேரடியாக விராட் கோலி லிட்டன் தாசிடம் வந்து தனது பேட்டை அன்பளிப்பாக கொடுத்தார். என்னை பொறுத்தவரை, லிட்டன் தாசுக்கு இது ஊக்கத்தை கொடுத்திருக்கும்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News