பும்ராவுக்கு எதிராக வலை பயிற்சியில் தடுமாறிய விராட் கோலி - தகவல்!

Updated: Thu, Sep 26 2024 12:40 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்துமுடிந்தது. 

இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு எதிராக விராட் கோலி பயிற்சி மேற்கொண்ட நிலையில், பும்ரா வீசிய 15 பந்துகளில் விராட் கோலி 4 முறை தனது விக்கெட்டை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்பின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராகவும் விராட் கோலி சோபிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 

முன்னதாக நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறிய விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 6 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வலை பயிற்சியில் விராட் கோலி தடுமாறிய நிகழ்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை