விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!

Updated: Sun, Jan 28 2024 11:26 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதி வருவதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், விராட் கோலி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “விராட் கோலியை அருகில் இருந்து பார்ப்பது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல முடியும். அவர் எந்த நேரத்தில் அணியுடன் மட்டுமே இருப்பவர். அதேபோல் களத்திற்கு வெளியில் விராட் கோலி என்ன செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியாது. ஒவ்வொரு கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி ஆர்வமுடன் பங்கேற்பதுடன் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற பசியும் அவரிடன் அதிகரித்து வருகிறது. 

எனக்கு தெரிந்து விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ அல்லது ஃபிட்னஸ் தொடர்புடைய முகாமிலோ பங்கேற்றதில்லை. இளம் வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து அதனை கற்று கொள்ள வேண்டும். சொந்த காரணங்கள் தவிர்த்து, வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் விளையாடாமல் இருந்ததில்லை. ஒருவேளை ஓய்வு தேவையென்றால் அவரை யாரும் தடுக்க போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை