ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

Updated: Tue, Mar 19 2024 20:47 IST
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அனைத்து அணிகளும் தொடரில் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர். மேலும் இத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதன்படி ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீசனில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களும் அணியில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுவரும் புகைப்படங்கள் வைரலானது. 

 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆர்சிபி அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. வழக்கமே சிகப்பு கருப்பு அல்லது பச்சை கருப்பு நிறமாக இருக்கும் ஆர்சிபி அணியின் ஜெர்சியானது இந்த சீசனில் நீலம் மற்றும் சிகப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ஜெர்சியுடன் இருக்கும் விராட் கோலி மற்றும் அணி வீரர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை