ஐசிசி தரவரிசை: மீண்டும் டாப்-5ல் நுழைந்தார் விராட் கோலி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய வீரர் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களையும் அடித்து அசத்தினார்.
அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 4 இன்னிங்ஸில் மூன்று சதம் விளாசி அசத்து இருக்கிறார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் மீண்டும் டாப் இடத்திற்கு சென்றுள்ளார்.
அதன்படி ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட ஆடவருக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் வேண்டர் டுசன் 766 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், குயின்டன் டி காக் 759 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 750 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்.
விராட் கோலி நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து அதிரடி காட்டினால் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் 10 இடங்களில் விராட் கோலியை தவிர ரோஹித் சர்மா பத்தாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று பந்துவீச்சாளருக்கான பட்டியலில் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிராஜை தவிர மற்ற இந்தியர்கள் யாரும் முதல் பத்து இடத்தில் இல்லை. இதேபோன்று டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 908 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியில் இந்திய அணி வீரர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை