சாம்பியன்ஸ் கோப்பை 2025: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

Updated: Wed, Mar 05 2025 20:00 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைக்க முடியும். உண்மையில், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்கள்

இந்திய அணியின் அனுபவ வீரர் விராட் கோலி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இதுவரை 17 போட்டிகளில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 82.88 சராசரியுடன் 746 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் விராட் கோலி 46 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் அவர் விளையாடிய 4 போட்டிகளில் 72.33 என்ற சராசரியில் 217 ரன்காளைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதமும் அடங்கும். 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை