சர்வதேச கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்று விராட் கோலி ரசிகர்களுக்கும் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு அவர் பளிச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார்.

Advertisement

கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை உடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என ஒரு காலத்தில் ரசிகர்கள் நம்பினர். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி எழுபது சதங்களை இதுவரை விளாசியுள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவும் முதல் மூன்று ஆண்டுகளில் சாதாரண வீரராக வலம் வந்தாலும், தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்த பிறகு தனது அதிரடியை காட்டி வேற லெவலுக்கு சென்றார் .

Advertisement

அதிக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றார். ஆனால் உலகின் டாப் நான்கு சிறந்த வீரர்கள் என தலைசிறந்த நான்கு வீரர்கள் என அழைக்கப்படும் வீரர்களில் விராட் கோலி மட்டும் தான் இடம் பெற்றுள்ளார். அதில் ரோகித் சர்மா கிடையாது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கையே ஓங்கி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் முல்ஹக் யார் சிறந்த வீரர் என்பதற்கு அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . அவர் கூறியதாவது, “ரோஹித் சர்மாவிடம் இருக்கும் ஒரு திறமை விராட் கோலி இடம் கிடையாது. விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் விளையாடியதை நேரில் பார்த்திருக்கிறேன். 

ஆனால் ரோஹித் சர்மா விளையாடும் சாட்கள் சிறப்பாக இருக்கும். அவர் ஷாட் அடிக்கும் போது பந்து ஸ்லோ மோஷனில் செல்வது போல் அவருக்கு தோன்றும் என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் டைமிங் ஷார்ட்கள் என்று சொல்வார்கள் அதை நான் ரோஹித் சர்மாவை பார்த்த போது தான் உண்மையாக தெரிந்து கொண்டேன். 

ரோஹித்துக்கு டைமிங் திறமை இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு என நினைக்கிறேன். இதனால் ரோஹித் சர்மா ஆட்டத்தின் போக்கையே ஒரு சில நொடிகளில் மாற்றி விடுவார். ரோகித் சர்மா செட் ஆனால் அவர் இஷ்டத்துக்கு ஷாட்களை அடிப்பார்.

Advertisement

2018 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 238 என்ற இலக்கை இந்தியா 39 ஓவரில் எட்டியது. இதில் கேப்டனாக களம் இறங்கிய ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதேபோன்று 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 149 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளாசினார். அதே போட்டியில் விராட் கோலி 85 ரன்கள் அடித்தார்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News