இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்ததுடன், சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகியும் படுதோல்வியைச் சந்தித்தது. 

Advertisement

இதனையடுத்து, அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் ஆஸ்திரேலியா சென்றடைந்ததுடன், பயிற்சி ஆட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

இந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்கள் காயங்களில் இருந்து மீண்டதுடன் பயிற்சிக்கும் திரும்பினர். ஆனால் அதேசமயம் ஷுப்மன் கில்லின் காயம் மோசமடைந்ததன் காரணமாக அவரால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காப்பட்ட ரோஹித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு செல்லவில்லை.மேலும் அவர் இன்னும் சில தினங்கள் தாது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவுசெய்ததன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.

இந்ந்நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகள் அவ்வபோது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த காணொளியில், இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் ஃபீல்டிங் பயிற்சியின் போது தமக்கு வந்த பந்தை வித்தியாசமான முறையில் கேட்ச் பிடித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

சர்ஃபராஸின் இந்த கேட்ச்சை பார்த்த விராட் கோலி அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். அதேசமயம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தும் தரையில் விழுந்து சிரித்தார். அவர்களுடன் துருவ் ஜுரெலும் இணைய மூவரும் ஒருவரை ஒருவர் பர்த்து சிரிப்பை அடக்க முடியாமல் இருந்த தருணம் வேடிக்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இக்காணொளியானது ரசிகர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News