அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர வீரர் 6 ப்வுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். ஒரு நாள் நீங்கள் ரன் எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்கள், இது நடக்கும், கடவுள் பெரியவர். இது எனக்கு கிடைத்த ஒரு கடைசி சந்தர்பம். அதனால் இப்போட்டியில் நிச்சயம் நன்றாக விளையாட வேண்டும் என்று என்னினேன். ஏனெனில் இப்போது இல்லை என்றால் எப்போதும் அதனை என்னால் செய்ய முடியது என தோன்றியது. 

இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். நாங்கள் கோப்பையை வெல்லும் சமயத்தில் நான் இதனை அறிவிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் நாங்கள் இன்று தோல்வியடைந்திருந்தால் நிச்சயம் இதனை அறிவித்திருக்க மாட்டேன். அடுத்த தலைமுறை டி20 ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மேலும் இதுஒரு அற்புதமான நாள். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

ரசிகர்கள் இந்திய அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடி முடிப்பதற்குள், விராட் கோல்யின் ஓய்வு முடிவானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை, 124 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம் மற்றும் 37 அரைசதங்களுடன் 4122 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News