ENG vs IND, 5th Test: கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய டிராவிட்!

Updated: Thu, Jun 30 2022 14:55 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நாளை பிர்மிங்கம் நகரில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 1 என இந்திய அணி கைப்பற்றிவிடும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளதால், ஒட்டுமொத்த பார்வையும் தற்போது விராட் கோலி மீது திரும்பியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பின் ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள கோலி, இந்த தொடரில் அதற்கு முடிவுகட்ட நல்ல வாய்ப்புள்ளது. 

ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் கோலிக்கு நல்ல ரெக்கார்ட்கள் உள்ளன. இதனால் கோலி சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் கோலியின் சதம் பெரிதல்ல என ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “எப்போதுமே மூன்று இலக்க எண்களை (100 ) மட்டுமே பெரிதல்ல. கடினமான சூழல்களில் அடிக்கும் 50 - 60 ரன்கள் தான் எப்போதுமே பெரிது. அதற்கு உதாரணம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் கோலி கடுமையான சூழலிலும் 70 ரன்களை அடித்து அசத்தினார்.

100 ரன்கள் அடித்தால் தான் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்ற அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிட்டார். பயிற்சியாளர்களை பொறுத்தவரையில், வெற்றியை தேடிக்கொடுக்கும் ஆட்டம் தான் தேவை. அது 50 ரன்களாக இருந்தாலும் கூட சரிதான்.

கோலி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். பயிற்சி போட்டியில் லெய்செஸ்டர் போன்ற களங்களில் 50 - 60 ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்தவகையில் கோலி நிச்சயம் சிறப்பாக ஆடுவார்” என டிராவிட் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை