தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் விராட் கோலியின் ஹோட்டலில் அவரது அறையில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

அதில் விராட் கோலி தன்னுடைய அறையை எப்படி சுத்தமாக வைத்து இருந்தார். மேலும் தனக்கு பிடித்த கடவுளின் சிலைகளையும் கோலி வைத்திருந்தார். இந்த காணொளி கிங் கோலியின் ஹோட்டல் ரூம் என்று இணையதளத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த புகைப்படம் விராட் கோலி கவனத்திற்கு சென்றுள்ளது.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி தன்னுடைய அனுமதி இல்லாமல் அறையில் புகைப்படம் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அதை நான் எப்போதும் வரவேற்பேன். ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும்.

இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்” என விராட் கோலி காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

கோலியின் மனைவியும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா கூறுகையில்,“ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்துகொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமானது. இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் இதற்கான எல்லைக்கோடு எது” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா தொடரின் போது தன் குழந்தையை அனுமதி இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனம் காணொளி எடுத்ததாக குற்றஞ்சாட்டி விராட் கோலி அதனை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தற்போது அவருடைய ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கோலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News