எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Washington Freedom vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் விளையாடிய 4 போட்டிகளிலும் மூன்று வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதல், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WAS vs TEX Match Details
- மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
- இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
- நேரம் - ஜூன் 23, அதிகாலை 1.30 மணி (இந்திய நேரப்படி)
Grand Prairie Stadium, Dallas Pitch Report
டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
WAS vs TEX: Where to Watch?
எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
WAS vs TEX Dream11 Team
- விக்கெட் கீப்பர் - டெவன் கான்வே
- பேட்ஸ்மேன்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெசிஸ் (துணை கேப்டன்), மார்க் சாப்மேன்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஜாக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவன் (கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்- ஆடம் மில்னே, நூர் அகமது.
WAS vs TEX Predicted Playing 11
Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திர, ஆண்ட்ரீஸ் கஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், ஜாக் எட்வர்ட்ஸ், ஒபாஸ் பியினார், இயன் ஹாலண்ட், மார்க் அடேர், முக்தார் அகமது, சவுரப் நேத்ராவல்கர்.
Texas Super Kings XI : டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), சைதேஜா முக்கமல்ல, டேரில் மிட்செல், மார்கஸ் ஸ்டோனிஸ், கால்வின் சாவேஜ், ஷுபம் ரஞ்சனே, முகமது மொஹ்சின், நூர் அகமது, ஆடம் மில்னே, ஜியா-உல்-ஹக்.
WAS vs TEX Dream11 Prediction, WAS vs TEX Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, WAS vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Washington Freedom vs Texas Super Kings
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.