இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 142 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 5ஆவது டெஸ்டை வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தார். 

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம் ஆகும். இந்த தொடரில் ஜோ ரூட் மொத்தமாக 737 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டுகளும் சாய்த்தார். இதன்மூலம் அதிக சதமடித்த சமகால கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் தற்போது முதலிடத்தில்  இருக்கிறார்.

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஜோ ரூட், 10,458  ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை குவித்து டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் தகர்த்து விடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் மேலும் கூறுகையில், “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்று விட்டுச் செல்வதை அறிவோம். எனினும் தற்போது 31 வயதான ஜோ ரூட், இன்னும் 5-6  ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்பதால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்'' என்று அவர் தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News