முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
Jofra Archer Sends Yashasvi Jaiswal back: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த அவர், தற்சமயம் மீண்டும் டெஸ்ட் அணியில் தனது கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஆர்ச்சருக்கு இடம் கிடைத்தது. இந்நிலையில் இன்று ஆர்ச்சர் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் ஓவரின் மூன்றாவது பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சார் வீசினார்.
அந்த ஓவரை ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட நிலையில், முதலிரண்டு பந்துகளை தவறவிட்டார். அதன்பின் மூன்றாவது பந்தையும் ஜெய்ஸ்வால் தடுத்து விளையாட முயற்சித்த நிலையில் பந்து பேட்டில் எட்ஜாகி ஹாரி புரூக் கைகளில் தஞ்சமடைந்தது. இதனால் ஜெய்ஸ்வால் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 19 ரன்களுடனும், கருண் நாயர் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.