ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 26 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வேல் - வைபவ் சூர்யவன்ஷி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்படி இன்னிங்ஸின் 5அவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட சூர்யவன்ஷி தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனையடுத்து இராண்டவது பந்தையும் அடிக்க முயன்ற அவர் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

இந்நிலையில் புவனேஷ்வர் குமார் தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜுரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சன்தீப் சர்மா

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: வைபவ் சூர்யவன்ஷி, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடும் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

Also Read: LIVE Cricket Score

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தகே, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News