அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மோரிஸ்வில்லே அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 10 ரன்களிலும், அசலங்கா 8 ரன்களிலும், முஸ்தஃபா 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து சர்ஜீல் கான் 28 ரன்னிலும், ஆண்ட்ரிஸ் கௌஸ் 27 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மோரிஸ்வில்லே அணியானது 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டீம் அபுதாபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோர்டன் கிளார்க் 4 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி அணியில் பில் சால்ட் 9 ரன்னிலும், மைக்கைல் பெப்பர் 2 ரன்னிலும், கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், லௌரி எவான்ஸ் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் இறுதிவரை போராடிய ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 30 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அபுதாபி அணியால் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியானது 3 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதபி அணியானது த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் செய்த செயல் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 

அதன்படி இப்போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடிய நிலையில், பந்தை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவர் பந்தை தடுக்க வேகமாக ஓடிய தருணத்தில் அங்கு பவுண்டரி எல்லைக்கு வெளியே பந்தை பிடிக்க இருந்த சிறுவனை கவணிக்க தவறினார். இதனால் அவர் அந்த சிறுவன் மீது மோதியதுடன், மைனத்தின் டிஜிட்டல் போர்டிற்கு பின் பக்கமாக விழுந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் ஃபாஃப் டூ பிளெசிஸ் பலத்த காயத்தை சந்தித்தார் என்று ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால் அதன்பின் அவர் எப்போதும் போல் மீண்டு ஃபீல்டிங் செய்ய களத்திற்கு திரும்பினார். இதனால் பெரும் காயத்தில் இருந்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தப்பியுள்ளார். இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் காயத்தில் இருந்து தப்பித்த காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News