ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களிலும், ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், தீபக் ஹூடா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். 

அதன்படி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசிய நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட டெவால்ட் பிரீவிஸ் கவர் திசையில் சிக்ஸரை விளாசிய நிலையில், அடுத்த பந்தையும் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்த தூக்கி அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கமிந்து மெண்டிஸ் யாரும் எதிர்பாராத வகையில் பவுண்டரி சென்ற பந்தை கேட்ச் பிடித்து மைதானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இதன் காரணமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். இந்நிலையில் கமிந்து மெண்டிஸின் இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால் இலக்கை நோக்கி விளையாடி வரும் சன்ரைசர்ஸ் அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ்(கேட்ச்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, தீபக் ஹூடா, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி(கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

Also Read: LIVE Cricket Score

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News