இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. 

Advertisement

இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

Advertisement

அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். 

ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

  • 1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு
  • 2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு
  • 2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு
  • 2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு
  • 2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News