ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வநிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ஃபசல்ஹக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்படி இன்னிங்ஸின் 3ஆவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட ஷுப்மன் கில் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகியும் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்பின் சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான சமயங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு தற்போது வரை 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
இம்பாக்ட் வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்