இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 02) ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது.

Advertisement

இந்தப் போட்டியில், 24 வயதான ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா வெற்றியின் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார், ஆனால் இந்திய அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது கூர்மையான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற வைத்தார். மேற்கொண்டு 2.3 ஓவர்களை மட்டுமே வீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தான் முழு உடற்தகுதியுடன் இருபதையும் உறுதிசெய்துள்ளார்.

Advertisement

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய முகமது ஷமி அதன்பின், காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். இதனால் அவர் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை, பார்டர் கவாஸ்கர் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடர்களையும் தவறவிட்டார்.

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள முகமது ஷமி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். அதன் ஒருபகுதியாக அத்தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்குமான இந்திய அணியில் இடம்பிடித்ததன் மூலம் கிட்டத்திட்ட 14 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய முகமது ஷமி அந்த போட்டியில் பந்துவீசிய நிலையிலும் விக்கெட்டை கைப்பற்ற தவறினர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடிய ஷமி முதல் ஓவரில் 17 ரன்களை கொடுத்த நிலையில், அடுத்த ஓவரில் பென் டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியதுடன், தனது கம்பேக்கில் முதல் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் அவர் ஆதில் ரஷித், மார்க் வுட் ஆகியோரையும் தனது அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் முகமது ஷிம் இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News