ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கத்திலேயே பிராண்டன் கிங்கின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும், ஷாய் ஹோப் 25 ரன்களையும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் பூரன் தனது சதத்தை பதிவு செய்ய மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் 4ஆவது பந்தை கவர்திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பந்தை பிடித்த நேரடியாக ஸ்டம்பை நோக்கி த்ரோ அடித்தார். 

 

அதனைச்சற்றும் எதிர்பார்க்காத நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 98 ரன்களில் ரன் அவுட்டாகி இரண்டு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில் பவுண்டரி எல்லையில் இருந்து நேரடியாக ஸ்டம்புகளை தகர்த்ததுடன், நிக்கோலஸ் பூரனையும் ரன் அவுட்டாக்கி வழியனுப்பி வைத்தை அஸ்மதுல்லா ஒமர்ஸாயின் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News