அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!

Updated: Wed, Sep 27 2023 16:00 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகுறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முடலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியுள்ளது.
 
மறுபுறம் ஆசிய கோப்பையை தொடர்ந்து இத்தொடரிலும் வென்று ஏற்கனவே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் திரும்பியுள்ளனர். இதன் காரணமாக முழு பலத்துடன் இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நேற்று ராஜ்கோட் மைதானத்திற்கு வந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மும்முரமான வலை பயிற்சிகளில் ஈடுபட்டனர். அப்போது ரோஹித் சர்மாவை பேட்டி எடுப்பதற்காக வர்னணையாளர் குழுவினர் அவரை காண சென்றார்கள். அப்போது அந்த குழுவில் இந்திய வீரர் அமித் மிஸ்ரா வர்னணையாளராக இருந்ததை பார்த்த ரோஹித் சர்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

அத்துடன் அமித் மிஸ்ராவின் கண்கள் சிவப்பாக இருந்ததை பார்த்த ரோஹித் சர்மா உங்களுடைய கண்கள் ஏன் சிவப்பாக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சரியாக தூங்கவில்லை என்று அவர் பதிலளித்தார். அப்போது அருகில் இருந்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் இன்று அமித் மிஸ்ரா 3 மணி நேரம் மட்டுமே தூங்கினார் என்று சொன்னார்.

 

அதனால் மேலும் வியப்படைந்த ரோஹித் சர்மா “களத்தில் கூட இவ்வளவு வேலை செய்ததில்லை” என்று கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்து வரணையாளராக மிஸ்ராவின் உழைப்பை பாராட்டினார். மேலும் கேப்டனாக தமது தலைமையில் இந்திய அணியில் நீ ஏன் விளையாட வரவில்லை என்றும் ரோஹித் சர்மா அவரிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அதற்கு “நீ விளையாடுவதற்கு என்னை அழைத்தால் தானே வர முடியும்” என்று அமித் மிஸ்ரா பதிலளித்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்னதாக 2003இல் அறிமுகமான அமித் மிஸ்ரா 22 டெஸ்ட், 36 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடி 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த போதிலும் நாளடைவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்திய அணியில் வாய்ப்பு பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை