இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் தொடங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான வானிலை அறிக்கையில் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கையை வைத்திருந்தது.

Advertisement

அதோடு ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை முழுமையாக காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் டேவை (செப்டம்பர் 11) அறிவித்திருந்தது. அந்த வகையில் செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டி மழையால் தடை பட்டால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால் இன்றைய போட்டி ஆரம்பித்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நடைபெற சாத்தியமில்லாமல் போனது. அதன் காரணமாக இன்று போட்டி கைவிடப்பட்டதாகவும் நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று போட்டி தொடங்கி 24.1 ஓவர்கள் வரை இந்திய அணி விளையாடி விட்டதால் சில மணி நேரங்கள் காத்திருந்த நடுவர்கள் மைதானத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் மீண்டும் இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால் போட்டி நாளை நடைபெறும் என்று அறிவித்தனர். ஒருவேளை மீண்டும் போட்டி இன்றே தொடங்கி இருந்தால் 34 ஓவர்கள் வரை தான் நடைபெற்று இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்று போட்டி மீண்டும் துவங்காமலே கைவிடப்பட்டதால் நாளை முழுவதுமாக இந்திய அணி 50 ஓவர்கள் பேட்டிங் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய போட்டி கைவிடப்பட்ட 24.1 ஓவரில் இருந்தே நாளை இந்திய அணி பேட்டிங்கை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் தான் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன்  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டி ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை கொடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பும்ரா, அஃப்ரிடியை கட்டித்தழுவி நன்றியை தெரிவித்தார். இந்நிலையில் இருவருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News