Shamar Joseph Video: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று பார்படாஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் காவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரேய்க் பிராத்வைட் 4 ரன்னிலும், ஜான் காம்பெல் 7 ரன்னிலும், கேசி கார்டி 20 ரன்னிலும், ஜோமல் வாரிக்கன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராண்டன் கிங் 23 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து 123 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை தடுமாற வைத்தார். அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டருக்கு அவர் வீசிய பந்தானது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதன்படி இந்த இன்னிங்ஸின் 44ஆவது ஓவரை ஷமார் ஜோசப் விசிய நிலையில், ஓவரின் கடைசி பந்த பியூ வெப்ஸ்டர் எதிர்கொண்டார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அப்போது ஷமார் ஜோசப் அபாரமான இன்ஸ்விங்கரை வீசிய நிலையில், அதனை சரியாக கணிக்க தவறிய பியூ வெப்ஸ்டர் பந்தை தடுத்து விளையாட முயன்று முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டும் ஆனார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பியூ வெப்ஸ்டர் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஷமார் ஜோசப் விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News