கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி

Updated: Sat, Jun 28 2025 15:29 IST
Image Source: Google

Seattle Orcas vs MI New York: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 97 ரன்களை விளாசியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

டல்லாஸில் உள்ள கிராண்ட் பியர் மைதானத்தில் எம்ஐ நியூயார் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணியில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் சதமடித்ததுடன் 107 ரன்களையும், தஜிந்தர் தில்லான் 95 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய சியாட்டில் ஆர்காஸ் அணியில் கைல் மேயர்ஸ் 37 ரன்னிலும், சிக்கந்தர் ரஸா 30 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 97 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், நியூயார்க் தரப்பில் கீரன் பொல்லார்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஜெஸ்ஸி சிங் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 4அவது பந்தை எதிர்கொண்ட ஹெட்மையர் ரன்கள் எடுக்க தவறினார். அதன்பின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஹெட்மையர் அதில் 2 ரன்களைச் சேர்க்க, அணி வெற்றிக்கு  கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Also Read: LIVE Cricket Score

அப்போது பொல்லார்ட் ஸ்லோவர் பந்தை வீசிய நிலையில் அதனை சரியாக கணித்த ஹெட்மையர் ஃபைன் லெக் திசையில் அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த சியாட்டில் ஆர்காஸ் அணி நடப்பு எம்எல்சி தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் ஹெட்மையர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::