ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

Advertisement

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அப்துல்லா சபிக்கை 20 ரன்களில் முகமது சிராஜ் எல்பிடபிள்யு மூலம் வெளியேற்றினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் கேஎல்.ராகுல் மூலம் ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார்.

Advertisement

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அழைத்ததத்தை தாண்டி பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்கொண்டு சென்றது. மேலும் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக பாபர் அசாம் அரைசதத்தை தொட்டார்.

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது ஸ்பெல்லுக்கு முகமது சிராஜை கொண்டு வந்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் தாண்டி அவர் ரன் கொடுத்தார். மீண்டும் இரண்டாவது ஓவருக்கு வந்த சிராஜ் அற்புதமான லைன் மற்றும் லென்த்தில் ஆப் ஸ்டெம்பை தட்டி பாபர் அசாமை கிளீன் போல்ட் ஆக்கினார். பாபர் அசாம் அரை சதம் அடித்த நிலையில் 50 ரன்களில் வெளியேறினார்.

 

இதனால் அடுத்தடுத்து வந்த வீரர்களாலும் இந்திய பந்துவீச்சுகு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்நிலையில் பாபர் அசாமின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News