SA vs IND: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!

Updated: Sat, Dec 11 2021 10:54 IST
Image Source: Google

இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சுரியனில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. 

இதற்கிடையில் விராட் கோலி தலைமையிலான 18 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்காக ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வாருகிறார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை