ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், அல்சொப், ஜோர்டன் காக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், எராஸ்மஸ், டிம் டேவிட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

ஒரு கட்டத்தில் அந்த அணி 55 ரன்காளிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய டாம் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்க்க ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வைப்பர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபகர் ஸ்மான், சாம் கரண் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் ஹொல்டன் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஆடம் ஹோஸ் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் கரண் சகோதரர்கள் இரு வேறு அணிக்காக விளையாடிய நிலையில், சாம் கரண் பந்துவீச்சில் டாம் கரண் பவுண்டரிகளை விளாசிய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. 

அதன்படி, ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்த தருணத்தில் இன்னிங்ஸின் 19ஆவது ஓவாரை வைப்பர்ஸ் தரப்பில் சாம் கரண் வீசினார். அப்போது அந்த ஓவரை கொண்ட டாம் கரண் ஓவரின் இரண்டாவது பந்தை கவர் பாய்ண்ட் திசையில் சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்தை பேக்வேர்ட் பாய்ண்ட் திசையில் பவுண்டரியை விளாசினார். அதன்பின் நான்காவது பந்தில் 2 ரன்களை எடுத்த அவர், மீண்டும் ஐந்தாவது பந்தில் பவுண்டரியை விளாசினார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் அந்த ஓவரில் டாம் கரண் மொத்தமாக 16 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். இந்நிலையில் சாம் கரண் பந்துவீச்சில் அவரது சகோதரர் டாம் கரண் அடுத்தடுத்து பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News