விராட், ரோஹித் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை - கௌதம் கம்பீர்!
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது நியூசிலாந்துக்கு எதிரான படு தோல்வி குறித்தும், பேட்டர்கள் சோபிக்க தவறியது குறித்தும், ஆஸ்திரேலிய தொடரில் எவ்வாறு செயல்படவுள்ளோம் என்பது குறித்து கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்மீது சமூக ஊடகங்களில் வைக்கப்படும் பேச்சுகள், விமர்சனங்கள் என் வாழ்க்கையிலோ அல்லது எந்த விஷயத்திலோ, வேறு யாருடைய வாழ்க்கையிலும் என்ன வித்தியாசத்தை ஏற்படுதியதா? அதுபோல் எனக்கு எதுவும் தெரியவில்லை.
நான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டபோது, இது மிகவும் கடினமான வேலை மற்றும் மிகவும் மதிப்புமிக்க வேலை என்று எனக்குத் தெரியும். உண்மையாகச் சொன்னால், அணியின் டிரஸ்ஸிங் ரூமில் சில நம்பமுடியாத மனிதர்கள் நாட்டிற்காக பல சாதனைகளை செய்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து செய்தும் வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் இந்தியாவுக்கு பயிற்சியளிப்பது என்பது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் மரியாதையாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வது தான் கற்றல். நான் அதற்காக எதனையும் சமாளிக்க விரும்பவில்லை. ஏனெனில் நாங்கள் அனைது துறைகளிலும் சிறப்பாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன், மேலும் அணியில் உள்ள அனைவரும் தொழிமுறை கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
அதனால் எங்களுக்கு வரும் விமர்சனங்களை, இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம், ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். ரோஹித் சர்மா உடனான எனது பிணைப்பு நம்பமுடியாததாக இருந்தது. நியூசிலாந்து தொடருக்கு முன், கான்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிராக போட்டியில் நாங்கள் நம்பமுடியாமல் அளவில் வெற்றியைப் பெற்றிருந்தோம். நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அது எதையும் மாற்றாது. ஆஸ்திரேலியா ஒரு புதிய தொடர், ஆஸ்திரேலியா ஒரு புதிய எதிரி, கண்டிப்பாக தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளோம். மேலும் விராட் மற்றும் ரோஹித் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் நம்பமுடியாத கடினமான மனிதர்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள், எதிர்காலத்திலும் அவர்கள் நிறைய சாதிப்பார்கள்.
எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் கடினமாக உழைக்கிறார்கள், அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள், அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறார்கள். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் உள்ளவர்களின் ஆர்வம் எனக்கும் முழுக் குழுவிற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது, அதிலும் குறிப்பாக கடந்த தொடரில் என்ன நடந்தது என்பதை பார்த்த பிறகு அதிலிருந்து நாங்கள் எவ்வாறு திரும்பி வருகிறோம் என்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம்.
அதேசமயம் ஆஸ்திரேலிய தொடரில் ஏதெனும் ஒரு போட்டியில் ரோஹித் சர்மா விலகுவார் என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். ஆனால் அவர் தொடர் முழுவது விளையாடுவார் என்று நம்புகிறோம். இருப்பினும் இந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல் உள்ளிட்டோரும் இப்பதால், ரோஹித் சர்மாவின் இடத்தை அவர்கள் நிச்சயம் நிரப்புவார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார். ஒருவேளை ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார். அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் என்ன நடக்கப் போகிறது, நாங்கள் தகுதி பெறப் போகிறோமா என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. அதனால் தற்சமயம் eங்களுக்கு ஒவ்வொரு தொடரும் முக்கியமானது, அதனால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.