ரிஷப் பந்த் மீண்டு வர பிராத்தனையில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Updated: Mon, Jan 23 2023 11:48 IST
We prayed for the speedy recovery of Rishabh Pant, says Suryakumar Yadav (Image Source: Google)

இந்தியா வந்துள்ளா நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்து முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்துள்ளனர்.

இந்தூர் வந்த இந்திய அணி வீரர்கள் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன் பிறகு  அளித்த பேட்டியில் சூர்யகுமார் யாதவ் கூறுகயில், “நாங்கள் ரிஷப் பந்திற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்தோம். அவர் திரும்ப வருவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்

கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, ரிஷப் பந்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். 

அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை