WI vs SA : 3ஆவது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

Updated: Tue, Jun 29 2021 11:10 IST
West Indies Announce Squad For 3rd T20I Against South Africa (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டின் இன்று செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதையடுத்து இப்போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடிய அதே வீரர்கள் இப்போட்டிகான அணியிலும் இடம்பிடித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரோன் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஒபேட் மெக்காய், ஆண்ட்ரே ரஸ்ஸல், லென்ட்ல் சிம்மன்ஸ் ,கெவின் சின்க்ளேர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை