ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு சஸ்கியா ஹார்லே - சாரா பிரைஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா பிரைஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் சஸ்கியா ஹார்லேவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கேத்ரீன் பிரைஸ் மற்றும் ஐல்சா லிஸ்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேத்ரீன் பிரைஸ் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐல்சா லிஸ்டர் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் லோர்னா ஜேக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டார்சி கார்ட்டர் 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. விண்டீஸ் அணி தரப்பில் அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - ஸ்டெஃபானி டெய்லர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டெஃபானி டெய்லர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான கேப்டன் ஹீலி மேத்யூஸும் 8 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெமைன் காம்பெல் 2 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் விண்டீஸ் அணி 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கியானா ஜோசப் - டியாண்டிரா டாட்டின் இணை பொறுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய கியானா ஜோசப் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டியாண்டியா டாட்டின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும், சின்லே ஹென்றி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 11.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News