West Indies Team Unwanted Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்துள்ளது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி  விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேமரூன் க்ரீன் 51 ரன்களையும், அறிமுக வீரர் மிட்செல் ஓவன் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளது. அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தோல்வியைத் தழுவிய அணி எனும் சதனையை வெஸ்ட் இண்டீஸ் சமன்செய்துள்ளது. முன்னதாக வங்கதேச அணி 192 போட்டிகளில் விளையாடி 113 டி20 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதே சாதனையாக அமைந்திருந்தது. 

 இந்நிலையில் தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி 221 டி20 போட்டிகளீல் 113ஆவது தோல்வியை பதிவுசெய்து, வங்கதேசத்தின் சாதனையை சமன்செய்துள்ளது. இந்த பட்டியலில் ஜிம்பாப்வே அணி 167 போட்டிகளில் 106 தோல்விகளைச் சந்தித்து மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது.  வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 221 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 94 போட்டிகளில் வெற்றியையும், 113 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள்

  • வெஸ்ட் இண்டீஸ் - 221 போட்டிகளில் 113 தோல்விகள்
  • வங்கதேசம் - 192 போட்டிகளில் 113 தோல்விகள்
  • இலங்கை - 206 போட்டிகளில் 108 தோல்விகள்
  • ஜிம்பாப்வே - 167 போட்டிகளில் 106 தோல்விகள்
  • பாகிஸ்தான் - 262 போட்டிகளில் 103 தோல்விகள்
  • நியூசிலாந்து - 232 போட்டிகளில் 95 தோல்விகள்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News