தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஐடன் மார்க்ரமின் அபார சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆடடத்தை மார்கோ ஜான்சென் 17 ரன்களுடனும், ஜெரால்ட் கோட்ஸி 11 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

Advertisement

இதில் ஜான்சென் 23 ரன்களிலும், கோட்ஸி 17 ரன்களிலும் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 342 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் பிராத்வைத் 11 ரன்களிலும், சந்தர்பால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்ஃபெர் - பிளாக்வுட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரெய்ஃபர் அரைசதம் கடந்தார். 

அதன்பின் 37 ரன்களில் பிளாக்வுட் ஆட்டமிழக்க, 62 ரன்களில் ரெய்ஃபரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 5 விக்கெட்டுகளையும், ரபாடா, கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடைசி ஷெசனில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுனையில் களமிறங்கிய டீன் எல்கர், ஸொர்ஸி, டெம்பா பவுமா, கீகன் பீட்டர்சென் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் ஐடன் மார்க்ரம் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 179 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News