ஐசிசி டி20 தரவரிசை: நான்காம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Wed, May 29 2024 21:55 IST
ஐசிசி டி20 தரவரிசை: நான்காம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் பங்கேற்கும் அணிகள் மற்ற அணிகளுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடின. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பாயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 

இத்தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இப்போட்டியளின் முதல் மூன்று இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நீடித்து வருகின்றன. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

அதேபோல் வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்க அணியானது மூன்று இடங்கள் பின் தங்கி புள்ளிப்பட்டியளின் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அயர்லாந்து தொடரை வென்ற பாகிஸ்தான் அணியானது ஒரு இடம் முன்னேறி புள்ளிப்பட்டியளின் 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற அமெரிக்க அணியும் ஒரு இடம் முன்னேறி 18ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை