WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!

Updated: Tue, Jan 28 2025 11:01 IST
Image Source: Google

வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.

அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - சோபனா மோஸ்ட்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் திலாரா அக்தர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்த நிலையில் சோபனாவும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷர்மின் அக்தர் மற்றும் கேப்டன் நிகர் சுல்தான இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இதில் இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷர்மின் அக்தர் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய நிகர் சுல்தான் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபிரேசர், கேப்டன் ஹீலி மேத்யூஸ், அஃபி ஃபிளெட்சர் தலா ஒரு விக்கட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தானர். பின் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் கியானா ஜோசப் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷமைன் காம்பெல்லும் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் மேத்யூஸுடன் இணைந்த டியாண்டிரா டோட்டினும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களையும், டிராண்டிரா டோட்டின் 7 சிக்ஸர்களை விளாசி 51 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை