மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது ரன் ரேட் அடிப்படையில் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. 

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது எதிவரும் மே 21ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டனாக ஹீலி மேத்யூஸ் தொடர்கிறார். மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டனாக ஷமைன் காம்பேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சினெல்லே ஹென்றி மற்றும் டியான்டிரா டோட்டின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனார். முன்னதாக இவர்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக அறிமுக வீராங்கனைகள் ஜஹ்சாரா கிளாக்ஸ்டன் மற்றும் ரியலியானா கிரிமண்ட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அணியின் அனுபவ வீராங்கனைகள் கரிஷ்மா ராம்ஹாராக், ஸ்டஃபானி டெய்லர், ஸைதா ஜேம்ஸ், கியானா ஜோசப் மற்றும் அஃபி பிளெட்சர் ஆகியோரும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கே), ஷெமைன் காம்பெல் (துணைக்கேப்டன்), ஆலியா அலீன், ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அஃபி பிளெட்சர், செர்ரி ஆன் ஃப்ரேசர், ஷபிகா கஜ்னபி, ஜன்னில்லியா கிளாஸ்கோ, ரியலினா கிரிம்மண்ட், ஸைதா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசர், கரிஷ்மா ராம்ஹராக், ஸ்டெஃபானி டெய்லர்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - மே 21 - கேன்டர்பரி
  • இரண்டாவது டி20 போட்டி - மே 23 - ஹோவ்
  • மூன்றாவது டி20 போட்டி - மே 26 - செல்ம்ஸ்ஃபோர்டு
  • முதல் ஒருநாள் போட்டி - மே 30 - டெர்பி
  • 2வது ஒருநாள் போட்டி - ஜூன் 4 - லெய்செஸ்டர்
  • 3வது ஒருநாள் போட்டி - ஜூன் 7 - டவுண்டன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News