Washington Freedom vs San Francisco Unicorns Dream11 Team: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது நாளை மறுநாள் (ஜூலை 29) நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

WAS vs SF: போட்டி தகவல்கள்

Advertisement

மோதும் அணிகள் - வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்

இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்

நேரம் - ஜூலை 29, அதிகாலை 6 மணி (இந்திய நேரப்படி)

WAS vs SF: Pitch Report

Advertisement

இந்தப் போட்டி டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 145 ரன்களாக உள்ளது. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 200 ரன்கள் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் பேட்டர்கள் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சமமான ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் இங்கு நடைபெறும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

WAS vs SF: Where to Watch?

மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் மூலம் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Washington Freedom vs San Francisco Unicorns Probable Playing XI 

வாஷிங்டன் ஃப்ரீடம் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஆண்ட்ரீஸ் கௌஸ், ரச்சின் ரவீந்திரா, கிளென் மேக்ஸ்வெல், முக்தார் அகமது, மார்கோ ஜான்சன், ஓபஸ் பைனார், இயன் ஹாலண்ட், லோக்கி ஃபெர்குசன், சௌரப் நெத்ரவால்கர்.

சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் உத்தேச லெவன்: பில் ஆலன், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஜோஷ் இங்கிலிஸ், ஷெர்ஃபெல் ரூதர்ஃபோர்ட், ஹாசன் கான், கோரி ஆண்டர்சன் (கே), பாட் கம்மின்ஸ், ஹாரிஸ் ராவுஃப், கார்மி லு ரூக்ஸ், ஜுவானாய் ட்ரைஸ்டேல்.

Advertisement

Texas Super Kings vs San Francisco Unicorns Dream11 Team

விக்கெட் கீப்பர் - ஜோஷ் இங்கிலிஸ்
பேட்ஸ்மேன்கள்- ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பில் ஆலன்
ஆல்-ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், ஹசன் கான் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, மார்கோ ஜான்சன்
பந்துவீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், சவுரப் நேத்ரவால்கர், ஜுவானோய் ட்ரைஸ்டேல்.

WAS vs SF Dream11 Prediction, WAS vs SF Dream11 Team, MLC 2024, Major League Cricket, Major League Cricket 2024, Fantasy  Cricket Tips, WAS vs SF Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Washington Freedom vs San Francisco Unicorns

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News