IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!

Updated: Thu, Feb 23 2023 12:11 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் வெற்றி கண்டு ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணியும், எப்படியாவது ஒரு வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியும் முணைப்புடன் உள்ளது.

இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோஹித் சர்மாவுக்கு முதல் போட்டியில் மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், அதில் மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார்.

எனவே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வான வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அங்கு வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி முகாமில் இணைவார்கள். கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் இதே கண்டிஷன் தான்.

ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது தான் பிரமாண்டமாக திருமணம் முடிந்தது. இதே போல ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடாமல் இருந்து வருகின்றனர். எனவே தான் அவர்களை முன்கூட்டியே என்சிஏ-வுக்கு வரவழைத்துள்ளனர். யுவேந்திர சாஹல் மற்றும் உமான் மாலிக் ஆகியோர் ஏற்கனவே பெங்களூர்வில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு 3ஆவது போட்டிக்காக 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வு தரப்பட்டிருக்கிறது. எனவே அவர் தேவையான பயிற்சி மற்றும் ஓய்வை எடுத்துவிட்டு நேரடியாக வந்துவிடுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை