டெஸ்ட் போட்டிகள் ஏன் மூன்று நாளில் முடிவடைகிறது - அஸ்வினின் பதில்!

Updated: Sun, Feb 26 2023 10:41 IST
'why did you finish the Test in 3 days?' I replied...': Ashwin reveals chat after 2nd Test win (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்றே நாட்களில் முடிவடைந்து விட்டது. இதன் காரணமாக பல்வேறு ரசிகர்கள் போட்டியை 5 நாட்கள் முழுமையாக காண முடியவில்லை என்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின், விமானத்தில் ரசிகர் ஒருவர் தம்மிடம் டெஸ்ட் போட்டி ஏன் மூன்று நாட்களில் முடிவடைகிறது என்று அவரது ஏமாற்றத்தை தன்னிடம் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

அதற்கு தாம் 3 காரணங்களை அவருக்கு கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், “பேட்ஸ்மேன்களின் மனநிலை தற்போது மாறிவிட்டதே போட்டிகள் சீக்கிரமாக முடிவடைவதற்கு காரணமாக உள்ளது. இப்போதெல்லாம் ஆட்டம் வேகமாக செல்ல வேண்டும் என பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்கிறார்கள். தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்கள் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு பிறகு ரன் சேர்க்கும் முறையை விரும்புவதில்லை.

எது சரி எது தவறு என்று நாம் ஒப்பிட்டு பார்க்க கூடாது, கிரிக்கெட்டை பொறுத்தவரை முந்தைய தலைமுறையுடன் எதையும் ஒப்பிட்டு செய்வது சரியாக இருக்காது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிந்திருக்கக்கூடிய போட்டிகள் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். 

அஸ்வினின் இந்த பேட்டி மிகவும் சரியானதாகும். ஏற்கனவே இங்கிலாந்து போன்ற அணிகள் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் வேகமாக விளையாடி மூன்று நாட்களுக்குள் முடித்து விடுகிறது. மற்ற அணி வீரர்களும் பொறுமையாக விளையாட வேண்டிய நேரத்தில் அதிரடியாக ஆடுகிறேன் என்று கூறி விக்கெட்டுகளை இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாகவே டெஸ்ட் போட்டி விரைவாக முடிவடைந்து விடுகிறது என்ற அஸ்வின் கூறியுள்ளார். 

டெல்லி டெஸ்ட் போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணி வேகமாக விளையாடுகிறேன் என்று பெயரில் தான் விக்கெட் களை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது குறித்து கவாஸ்கர் சொன்ன வார்த்தைகள் மிகவும் முக்கியமானது. உங்களால் ஒரு இன்னிங்ஸில் 90 ஓவர்களை பிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் தோல்வி  தான் தழுவுவீர்கள். டிரா செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 90 ஓவர்களுக்கு மேல் ஒரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை