இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் ஆடிய இந்தியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.

Advertisement

இந்திய அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் முழுவதும் சொதப்பியதே காரணம். எனினும் விராட் கோலி மீதுதான் அதிக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ரோஹித் சர்மா (0), ஷிகர் தவான் (6), ரிஷப் பந்த் (0) என அடுத்தடுத்து வெளியேறியதால், கோலி தான் அணியை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருந்தார். அதற்கேற்றார் போல அடுத்தடுத்து பவுண்டரிகள் பறந்தன.

Advertisement

ஆட்டத்தை தொடங்கியவுடனே ஆஃப் ட்ரைவ், ஆன் ட்ரைவ், கவர் ட்ரைவ் என மிகவும் புத்துணர்ச்சியுடன் ஆடிய விராட் கோலி, விக்கெட்கள் சரிவதை கண்டு பதற்றமடைந்தார். இதனால் 16 ரன்களுக்கெல்லாம் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கோலி சதமடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் கிடைத்தது.

இந்நிலையில் கோலிக்கு தோள்கொடுத்து ரோஹித் பேசியுள்ளார். அதில், “கோலி குறித்து இவ்வளவு விமர்சனங்கள் ஏன் வருகிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. ஒரு சிறந்த வீரரின் பயணத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க தான் செய்யும். அவர் எத்தனை ரன்கள், சதங்கள் அடித்துள்ளார்கள் என்பதை பாருங்கள். எத்தனை போட்டியை வென்றுகொடுத்த சிறந்த பேட்ஸ்மேன் அவர்.

நீண்ட வருடங்களாக சாதனைகளை புரிந்து வரும் விராட் கோலி, மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சிறந்த வீரருக்கு ஒன்று அல்லது 2 சிறந்த இன்னிங்ஸ்கள் போதும். அவர் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்துவிடுவார். கோலி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நல்ல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துக்கொண்டு தான் இருக்கும். எனவே விமர்சனங்கள் செய்யாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News